உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெல் வயல்களை உழுது எள் விதைக்க விவசாயிகள் தயார்

நெல் வயல்களை உழுது எள் விதைக்க விவசாயிகள் தயார்

பரமக்குடி அருகே சோகம்பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியப் பகுதிகளில் போதிய மழையின்றி நெல் விதைத்த வயல்களை உழவு செய்து எள் விதைக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை தவறி பெய்வதால் வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து உழவு செய்து நிலத்தை பண்படுத்தி நெல் விதைத்தனர்.ஆனால் குறிப்பிட்ட பகுதிகளில் மழையின்றி நெற்பயிர் வளர்ச்சி தடைப்பட்டது.இதனால் தற்போது மீண்டும் நெல் வயல்களை விவசாயிகள் டிராக்டர் மூலம் உழவு செய்கின்றனர். வரும் நாட்களில் சிறிதளவு மழை பெய்யும் சூழலில் எள் விதைத்து மகசூல் காண முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர். தொடர்ந்து நெல் விவசாயம் பொய்த்ததால் சோகத்திலிருந்து விவசாயிகள் மீண்டு வர மாவட்ட நிர்வாகம் கண்மாய் பாசனத்திற்கு வழி வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !