மழையை எதிர்பார்த்து ஆனந்துார் விவசாயிகள்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார், திருத்தேர்வளை, சுத்தமல்லி, ராதானுார், சாத்தனுார், ஆய்ங்குடி, துவார், பச்சனத்திக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்போது வளர்ச்சி நிலையில் உள்ளன.சில வாரங்களுக்கு முன்பு பெய்த பருவ மழையை பயன்படுத்தி விவசாயிகள் நெற்பயிர்களுக்கு இடையூறாக வளர்ந்து வந்த களைகளை களைக்கொல்லி மருந்து தெளித்து கட்டுப்படுத்தினர். அதன் பின் ஆனந்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்கள் ஈரப்பதமின்றி காய்ந்த நிலையில் இருக்கிறது.நெற்பயிர்களுக்கு ஊரமிடுவதற்கு நெல் வயலில் அதிகளவு தண்ணீர் தேவை என்பதால் உரமிடுவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்களுக்கு அப்பகுதியில் விவசாயிகள் உரமிடும் பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.