பருத்தி செடிகளுக்கு போர்வெல் நீரை பாய்ச்சும் விவசாயிகள்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்து வந்தனர். அதற்கு அடுத்தபடியாக மிளகாய், பருத்தி உட்பட சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்தனர். பல்வேறு கிராமங்களில் பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பருத்தி விவசாயத்திற்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. தற்போது கண்மாய், ஊருணி வறண்டு கிடக்கிறது. இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் கூடுதல் பணம் செலவு செய்து போர்வெல் தண்ணீரை பாய்ச்சுகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பருத்தி விலை மிக குறைவாக உள்ளது. இருந்த போது விவசாயத்தை கைவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் பணம் செலவழித்து வருவதாக விவசாயிகள் கூறினர்.