உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி பஸ் ஸ்டாண்ட்டில் பற்றி எரிந்த குப்பையால் அச்சம்

பரமக்குடி பஸ் ஸ்டாண்ட்டில் பற்றி எரிந்த குப்பையால் அச்சம்

பரமக்குடி; பரமக்குடி நகராட்சியில் ஆங்காங்கே குப்பை கொட்டப்படும் சூழலில் பஸ் ஸ்டாண்டில் குப்பை பற்றி எரிந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. இங்கிருந்து ஒவ்வொரு நாளும் அள்ளப்படும் குப்பையை நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும். துாய்மை இந்தியா திட்டத்தில் ஒவ்வொரு வீடு மற்றும் வணிக நிறுவனங்களிலும் மக்கும், மக்காத குப்பை என பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் கொடுக்கின்றனர். இவற்றை முறையாக குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லாமல் வைகை ஆற்றின் கரை ஓரம் உட்பட ஆங்காங்கே உள்ள நகராட்சி மற்றும் பொது இடங்களில் மூடை கட்டி வைக்கின்றனர். இதுபோல் பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்த குப்பை நேற்று மாலை 5:00 மணிக்கு எரிந்தது. அப்போது பஸ் ஸ்டாண்டில் ஏராளமான பயணிகள், மாணவர்கள் இருந்த நிலையில் பதற்றம் அடைந்தனர். அருகில் உள்ள கடைக்காரர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவித்ததின் பேரில் அங்கு வந்து தீயை அணைத்தனர். ஆகவே ஒவ்வொரு பகுதியிலும் சேகரிக்கப்படும் குப்பையை அவ்வப்போது கிடங்கிற்கு கொண்டு செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை