மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
28-Aug-2025
சாயல்குடி : சாயல்குடி அண்ணா நகரில் உள்ள சோனை கருப்பண்ண சாமி, வீரிய காளியம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு உற்ஸவம் நடந்தது. விழாவை முன்னிட்டு மூலவர் சோனை கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மாலையில் விளக்கு பூஜை நடந்தது. மறுநாள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் பக்தர்கள் பூஜை செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சாம பூஜைகளும், பொது பொங்கல் மற்றும் உறியடித்தல் உள்ளிட்டவைகள் நடந்தது. சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. ஏற்பாடுகளை சாயல்குடி அண்ணா நகர் அருந்ததியர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
28-Aug-2025