மேலகொடுமலுாரில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்; தினமலர் செய்தி எதிரொலி
முதுகுளத்துார்; தினமலர் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே மேலகொடுமலுார் கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மேலகொடுமலூர் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கிராமத்தில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் தினந்தோறும் மக்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வட்டார டாக்டர் நெப்போலியன் தலைமையிலான டாக்டர் குழுவினர் மேலகொடுமலுார் கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர்.கிராமத்தில் உள்ள மக்களுக்கு பரிசோதனை செய்து தேவையான மருந்து, மாத்திரைகள் உட்பட கசாயம் வழங்கினர். பின்பு காய்ச்சல் தடுப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.