உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலத்தில் பரவும் காய்ச்சல்; மருத்துவமனைகளில் குவிகின்றனர்

ஆர்.எஸ்.மங்கலத்தில் பரவும் காய்ச்சல்; மருத்துவமனைகளில் குவிகின்றனர்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் பெரும்பாலானோர் மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் குவியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் ஆனந்துார், சோழந்துார், திருப்பாலைக்குடி பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி பகுதிகளில் துணை சுகாதார நிலையங்களும் அமைந்துள்ளன. இந்த சுகாதார நிலையங்கள் மூலம் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலையால் ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார், சனவேலி, உப்பூர், சோழந்துார், திருப்பாலைக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும்பாலானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்ம காய்ச்சல் பாதிப்பின் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தனியார் மருத்துவமனைகளிலும் வழக்கத்தை விட அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலை ஏற் பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மர்ம காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிந்து காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைப்பு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தொடர் வெப்பம் நிலவிய நிலையில், திடீர் மழையால் சீதோஷ்ண நிலை மாறுவதால் சிலருக்கு உடல் ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டு காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். எனவே, பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்றும், சுற்றுப்புற பகுதிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ