புலவரப்பா தர்கா அருகே தீ அணைப்பு
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் புலவரப்பா ஊருணியை ஒட்டியவாறு அதிகளவிலான காட்டு சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. நேற்று மதியம் சீமைக்கருவேல மரங்களில் தீ பற்றியதால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் புலவரப்பா தர்கா பகுதி, கலைஞர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகள் பாதிப்படைந்தனர்.தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் கருப்பையா தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதியை சுற்றியுள்ள சீமைக்கருவேல மர புதர் பகுதியில் ஏற்பட்ட தீயால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.