உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து சேதம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து சேதம்

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணிகள் பரிசோதனை மையத்தில் இருந்த தளவாடப் பொருள்கள் எரிந்து சாம்பலாயின.ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்படுகிறது. இங்கு இரவுப்பணியில் செவிலியர்கள் உள்ளனர். இவ்வளாகத்தில் உள்ள கர்ப்பிணிகள் பரிசோதனை செய்யும் மையத்தில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. காலை 8:00 மணிக்கு அம்மையத்தில் இருந்து புகை வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்தனர்.அங்கிருந்த படுக்கைகள், பிரிட்ஜ், ஆவணங்கள், மற்றும் குடும்ப நலப் பெட்டகம் உள்ளிட்டவை எரிந்தன. புகையால் ஸ்கேனர் சேதமடைந்துள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பையா தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். பரிசோதனை மையத்தில் ஊழியர்கள், நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அறையில் உள்ள 'ஏசி' யில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !