உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் செயல்படாத மீன் அங்காடி; ரோட்டோர கடைகளால் மக்கள் பாதிப்பு

பரமக்குடியில் செயல்படாத மீன் அங்காடி; ரோட்டோர கடைகளால் மக்கள் பாதிப்பு

பரமக்குடி, : பரமக்குடி நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் அங்காடி ரூ.1 கோடியில் சீரமைக்கப்பட்டும் செயல்படாமல் வெறிச்சோடிய நிலையில் உள்ளது. இப்பகுதியில் ரோட்டோர கடைகள் அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.பரமக்குடி மீன் கடை தெருவில் பல ஆண்டுகளாக மீன் சந்தை உட்பட அரிசி, காய்கறி வியாபாரம் நடந்தது. வளாகம் சேதமடைந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 கோடியில் சீரமைக்கப்பட்டது. வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டது. இதேபோல் பல தினசரி கடைகள் இயங்கும் வகையில் கூரையுடன் கூடிய கடைகள் உள்ளன. ஆனால் மீன் சந்தை கடைகள் முறையாக கட்டப்படாமல் சிறிய அளவில் உள்ளதால் பயன்படாமல் இருக்கிறது. இதே போல் தெருவோர மீன் வியாபாரம் உட்பட காய்கறி கடைகள் இயங்கும் வகையில் அமைக்கப்பட்ட வளாகமும் வீணாகி வருகிறது. தெருவோர வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வசூல் செய்யப்படுவதால் கடைகளை அகற்ற முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் மீன் மார்க்கெட் வளாகம் வைகை சர்வீஸ் ரோட்டை ஒட்டி இருப்பதால் பரமக்குடி, எமனேஸ்வரம் மக்கள் பொருட்களை வாங்க வசதியாக இருக்கும். எனவே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட நகராட்சி வளாகம் நகரின் மையப் பகுதியில் இருக்கும் நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பல்வேறு ரோடுகளில் நெரிசல் குறைய வாய்ப்பாக அமையும்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை