மேலும் செய்திகள்
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத சூரை மீன்
27-Aug-2025
ராமேஸ்வரம்; கேரளாவில் அதிக மீன் வரத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மீன்கள் விலை 4 மடங்கு குறைந்தது. செப்.,14ல் பாம்பனில் இருந்து 90 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து நேற்று காலை கரை திரும்பினர். பெரும்பாலான படகில் முண்டக்கண்ணி பாரை மீன்கள் டன் கணக்கில் சிக்கின. சில நாட்களுக்கு முன் இந்த மீன்கள் கிலோ ரூ.120க்கு வியாபாரிகள் வாங்கினர். ஆனால் நேற்று கிலோ ரூ.25க்கு தான் விற்பனையானது. கேரளா, கன்னியாகுமரியில் டன் கணக்கில் குமுலா, மத்தி(பேச்சாளை) மீன்கள் சிக்கியுள்ளன. இதனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தற்போது கருவாடுக்கு வாங்கியதாகவும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
27-Aug-2025