உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அமைச்சக ஐவர் குழு ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அமைச்சக ஐவர் குழு ஆய்வு

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே அமைச்சகம் நியமித்த ஐவர் குழுவினர் ஆய்வு செய்தனர்.பாம்பன் கடலில் ரூ. 530 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை நவ.,13, 14 ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி ஆய்வு செய்தார்.இவர் ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பிய ஆய்வறிக்கையில் துாக்கு பாலத்தை ரயில்வே வாரியம் ஒப்புதல் இன்றி அமைத்ததாகவும், இங்கு வெல்டிங் பணியில் குறைபாடுகள் உள்ளதாகவும், துருப்பிடித்தலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் சில குறைகளை சுட்டிக்காட்டி இருந்தார். இதனால் பாம்பன் பாலம் திறப்பு விழா தள்ளிப் போயுள்ளது.இதையடுத்து பாம்பன் பாலத்தை ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்வார்கள் என ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. அதன்படி நேற்று பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு ரயில்வே வாரிய முதன்மை செயல் இயக்குநர் ரவீந்திரகுமார் கோயல், உள்கட்டமைப்பு முதன்மை செயல் இயக்குநர் எஸ்.எஸ்.கேடியா, ரயில்வே கட்டுமானப் பிரிவு இயக்குநர் எம்.பி.சிங், ரயில்வே வாரிய உறுப்பினர் ராம் கிஷோர், உ.பி., ஐ.ஐ.டி., பேராசிரியர் யோகேந்திர சிங் ஆகியோர் வந்தனர். இவர்கள் புதிய ரயில் பாலத்தின் இரும்பு கர்டர்கள், துாக்கு பாலத்தை ஆய்வு செய்தனர். 2ம் நாளான இன்றும் பாதுகாப்பு ஆணையர் சுட்டிக்காட்டிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர். இதன் பின் ஐவர் குழுவினர் அறிக்கையை ஒரு சில நாட்களுக்கு பின் ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்ப உள்ளதாக ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை