உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காணிக்கை அன்னை சர்ச் விழாவில் கொடியேற்றம்

காணிக்கை அன்னை சர்ச் விழாவில் கொடியேற்றம்

பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டையில் பழமை வாய்ந்த காணிக்கை அன்னை சர்ச் விழாவில் நேற்றுமுன்தினம் கொடியேற்றம் நடந்தது. பிப்.1ல் தேர்பவனி நடக்கிறது.விழாவில் நேற்று முன்தினம் சர்ச் முன்புறம்உள்ள பெரிய கொடி மரத்தில் கொடிபட்டம் ஏற்றினர். முத்துப்பேட்டை பாதிரியார் சவரி முத்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். நவநாட்கள்எனப்படும் ஒன்பது நாட்களிலும் தினமும் மாலை ஜெபம், திருப்பலி, மறையுறை மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.,1ல் மாலையில் சிறப்பு திருப்பலியும் இரவு காணிக்கை அன்னை, குழந்தை இயேசுவின் சொரூபம் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியால் உள்ள தேர்பவனி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ