அனைத்து அலுவலகங்களிலும் கொடியேற்ற வலியுறுத்தல்
திருவாடானை: சுதந்திரதினத்தன்று மத்திய, மாநில அரசு என அனைத்து அலுவலகங்களிலும் தேசியக் கொடியேற்ற வேண்டும். நாடு முழுவதும் சுதந்திர தினம்ஆக.,15ல் நாட்டுப்பற்றுடன் கொண்டாடபட்டாலும் விடுமுறை என்பதால் சில அரசு அலுவலகங்களில் கொடியேற்றுவதில்லை. குறிப்பாக சில அரசு அலுவலகங்களில் ஆண்டுதோறும் கொடியேற்றப்படாமல் உள்ளது. திருவாடானையில் சார்நிலை கருவூல அலுவலகம், புள்ளிவிபர அலுவலகம், ஸ்டேட்பாங்க், தபால் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்களில் கொடியேற்றுவதில்லை. கிராமங்களில் சில பள்ளிகளில் பெயரளவிற்கு கொடியேற்றப்படுகிறது. வரும் சுதந்திர தினத்திற்கு மறுநாள் தொடர்விடுமுறையாக இருப்பதால் இந்த ஆண்டும் கொடியேற்றபடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மத்திய, மாநில அரசின் அனைத்து அலுவலகங்களிலும் கொடியேற்றும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.