அகற்றப்படாத கொடி கம்பங்கள்; அலட்சியத்தில் அதிகாரிகள்
திருவாடானை; நீதிமன்றம் உத்தரவிட்டும் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.தேசிய, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் ஏப்.21.,க்குள் அகற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.அதனை தொடர்ந்து திருவாடானை, தொண்டி பகுதியில் கொடி கம்பங்கள் அகற்றும் பணி நடந்தது. ஆனால் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி அருகே நம்புதாளையில் இன்னமும் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள், மக்கள் கூறுகையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, தேவையற்ற பிரச்னை ஏற்படுகிறது. கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் இருப்பது கோர்ட்டு உத்தரவை மீறுவதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.