உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக தட்டைப்பயிறு

 தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக தட்டைப்பயிறு

ரெகுநாதபுரம்: திருப்புல்லாணி, தினைக்குளம், வைரவன்கோவில், சின்னாண்டி வலசை உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக தட்டைப்பயறு சாகுபடி செய்கின்றனர். தட்டைப்பயறு என்பது காராமணி என்றும் அழைக்கப்படும் ஒரு பயறு வகை. இது புரதம், நார்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சத்தான உணவு. தட்டைப்பயிரை பல வழிகளில் சமைத்து சாப்பிடலாம். குழம்பு, கூட்டு, சாலட் அல்லது சாதம் போன்ற உணவுகளில் இதை சேர்க்கலாம். தட்டைப்பயறு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடல் எடையை குறைக்கவும் கண்பார்வை அதிகரிக்கவும் பயன்படுகிறது. எனவே கிராமப்புறங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களிலும் தட்டைப்பயறு பெருவாரியான அளவு வளர்க்கின்றனர். அந்த அளவுக்கு இனிப்பு சுவை கொண்டதாகும். நன்கு விளைந்த தட்டைப்பயிரை காய வைத்து எடுத்த பின்னர் அவற்றில் உள்ள மீதமுள்ள செடி கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ