மேலும் செய்திகள்
அம்மன் கோயில் பால்குட விழா
12-May-2025
திருவாடானை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஆனிமுத்து கருப்பர், தொண்டி அருகே நம்புதாளை பதினெட்டாம்படி கருப்பர், திருவாடானை மேலரதவீதி சந்தனகருப்பர் மற்றும் பல்வேறு கிராமங்களில் அமைந்துள்ள கருப்பர் கோயில்களில் திருவிழா நடந்தது.ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கினர். காவடி எடுப்பு ஊர்வலம் நடந்தது. அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.* ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்ணாரேந்தல் கருப்பண சுவாமி கோயிலில், சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, பூக்குழி விழா நடைபெற்றது.முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் முள்ளிமுனை கடலில் புனித நீராடி அங்கிருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கோயிலின் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.மூலவருக்கு 18 வகையான அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
12-May-2025