உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் கடலில் மலர் துாவி பொங்கல் விழா

பாம்பன் கடலில் மலர் துாவி பொங்கல் விழா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் மீனவர்கள் பொங்கல் வைத்து கடலில் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.ராமேஸ்வரம் தீவு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பாம்பன் நடுத்தெரு மீனவ கிராமத்தின் கடற்கரையில் மும்மதத்தினரும் பங்கேற்ற கடல் பொங்கல் விழா நடந்தது. இதில் மீனவப் பெண்கள் கடற்கரையில் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதன்பின் பொங்கல் பானை, குத்துவிளக்கு, மலர்களுடன் கடலில் இறங்கி மலர் துாவி மரியாதை செலுத்தினர்.மீனவர் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ராமேஸ்வரம் தீவு சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் ஜெரோம் குமார், தங்கச்சிமடம் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் முருகேசன், பாம்பன் தெற்குவாடி கிராமத் தலைவர் முனீஸ்வரன், பாம்பன் கிறிஸ்தவம், முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹனிபா, மோட்சம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ