உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் நாள் முழுவதும் பனிமூட்டம் மக்களை ஏமாற்றும் மழை

பரமக்குடியில் நாள் முழுவதும் பனிமூட்டம் மக்களை ஏமாற்றும் மழை

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் மழை அறிவிப்பு செய்த நிலையிலும் பரமக்குடியில் நாள் முழுவதும் பனிமூட்டம் நிலவுகிறது.வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை சீராக பெய்யாமல் உள்ளது. பரமக்குடி நகராட்சி மற்றும் போகலுார், நயினார்கோவில், பரமக்குடி ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை.இந்நிலையில் ஒன்றியப் பகுதிகளில் 60 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் விவசாயிகள் ரூ.6000 முதல் 15,000 வரை செலவு செய்துள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மழை அறிவிப்பு செய்யப்படும் நிலையில் பரமக்குடி சுற்றுவட்டாரத்தில் மட்டும் மழை பெய்யாமல் உள்ளது. இதேபோல் கடந்த சில நாட்களாக பனி மூட்டம் அதிகமாகி உள்ளது.நேற்று முன்தினம் அவ்வப்போது மழை பெய்த நிலையில், நேற்று காலை முதல் மதியம் வரை பனிமூட்டம் நீடித்தது. இதனால் தொற்று நோய் பாதிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !