பக்தர்களுக்கு அன்னதானம்
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் நேற்றுமுன் தினம் பிரதோஷ பூஜை நடந்தது. அதனை முன்னிட்டு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் மாலை முதல் இரவு வரை தொடர் அன்ன தானம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் பவுர்ணமி, அமாவாசை, தேய்பிறை, பிரதோஷம், தமிழ் மாதத்தின் முதல் சனி, ஞாயிறு, பஞ்சமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் அன்னதான சேவை வழங்கி வருகின்றனர். பொறுப்பாளர் மானாமதுரை பாக்கியராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் சக்திவேல், செயலாளர் மதுரை நாகராஜன், நிர்வாகிகள் பொன்ராஜ் சொர்ணமூர்த்தி, முத்தமிழ் செல்வன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் குழுவினர் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.