உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரியில் உணவு திருவிழா

கல்லுாரியில் உணவு திருவிழா

பெரியபட்டினம்,: முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரி வணிகவியல் துறை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் உணவு திருவிழா நடந்தது. முதல்வர் சூசை நாதன் தலைமை வகித்தார். செயலர் எட்வர்ட் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். கல்யாண குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சாம்சங் ஸ்மார்ட் பிளாசா ராமநாதபுரம் நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் கவுதம், ராமநாதபுரம் பி.எஸ்.ஜி., ஸ்டூடியோ நிறுவனர் முகமது யூசுப் அலி, திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜா, கல்லுாரி துணை முதல்வர்கள் மகாலட்சுமி, மதன்நாதன் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்கள் தயாரித்த பல்வேறு வகையான சிறு குறு தானிய உணவுகள், தின்பண்டங்கள், துரித உணவுகள் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தினர். டிஜிகாம் என்னும் இணையதள நுால் வெளியீட்டு விழா நடந்தது. கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் சுகன்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை