உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை சிறையில் 76 நாளாக மீனவர்கள் பாம்பனில் மீன்துறை அலுவலகம் முற்றுகை

இலங்கை சிறையில் 76 நாளாக மீனவர்கள் பாம்பனில் மீன்துறை அலுவலகம் முற்றுகை

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் 76 நாட்களாக இருக்கும் 35 மீனவர்களை விடுவிக்கக் கோரி நேற்று ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மீன்துறை அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.ஆக.8ல் பாம்பனில் இருந்து 4 நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து புத்தளம் மாவட்டம் வாரியாபிலா சிறையில் அடைத்தனர். இம்மீனவர்களை தவறுதலாக விசைப்படகு மீனவர்கள் என மீன்துறையினர் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.இதனால் 35 பேருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் தொடர்ந்து 76 நாட்களாக சிறையில் வாடும் மீனவர்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர், உணவு வழங்குவதால் தொற்று நோய் பரவி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் மீனவர்களை விடுவிக்கக் கோரி நேற்று பாம்பன் அக்காள்மடத்தில் உள்ள மீன்துறை அலுவலகத்தை மீனவர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இவர்களை மீன்துறை அதிகாரிகள் சமரசம் செய்தும் தோல்வியில் முடிந்தது. சாகும் வரை தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை