வனத்துறையினருக்கு காட்டுப்பன்றிகளை சுட பயிற்சி
ராமநாதபுரம்:வேளாண் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வன ரேஞ்சர், பாரஸ்டர், கார்டுகளுக்கு மீண்டும் துப்பாக்கி சுடும் புத்தாக்க பயிற்சி முகாம் தேனி வைகை அணை, சென்னையில் நடக்கிறது.தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நன்கு விளைந்த பயிர்களை சேதப்படுத்துகின்றன.வனத்துறையில் ஏற்கனவே துப்பாக்கியை கையாளத் தெரிந்த வனரேஞ்சர், பாரஸ்டர், கார்டு ஆகியோரை குழுவாக வரவழைத்து பகுதிவாரியாக தேனி மாவட்டம் வைகை அணை, சென்னையில் துப்பாக்கி சுடும் புத்தாக்கப்பயிற்சி துவங்கியது. தலா 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் காட்டுப்பன்றிகளை சுடுவதற்குரிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.