உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு ராமநாதபுரத்தில் உற்சாக வரவேற்பு

முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு ராமநாதபுரத்தில் உற்சாக வரவேற்பு

ராமநாதபுரம்; அ.தி.மு.க., மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி இரு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ராமநாதபுரம் வந்த பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராமநாதபுரத்தில் தனியார் ஓட்டல் கூட்ட அரங்கத்தில் மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், பிரதிநிதி களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. வேல், சுவாமி சிலை, வாள் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கினர். அதன் பிறகு மாலை ரோமன் சர்ச் முதல் அரண்மனை வரை ரோடு ேஷா நடந்தது. அதன் பிறகு அரண்மனை ரோட்டில் மக்கள் மத்தியில் பழனிச்சாமி 2026 சட்ட சபை தேர்தலில் ஓட்டளிக்க வேண்டி பேசினார். இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், நகர் செய லாளர் பால்பாண்டியன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், நகர் இளைஞர் அணி செயலாளர் தஞ்சிசுரேஷ், திருப்புல்லாணி மத்திய ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். * பரமக்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் டாக்டர் முத்தையா, பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ராமநாத புரம் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் பாலு, பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அ.தி.மு.க.,வில் இணைத்தார். பரமக்குடி நகர் தலைவர் வின்சென்ட் ராஜா நினைவு பரிசு வழங்கினார். ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆர்.எஸ்.மங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். * முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே வருகை தந்த பழனிசாமியை எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், இணைச் செயலாளர் பாண்டியன், விவசாயப்பிரிவு மாநில துணைச் செயலாளர் சண்முகபாண்டியன், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் கதிரேசன், கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கமுதி மேற்கு ஒன்றிய செயலாளர் கருமலையான், கமுதி ஒன்றிய அவைத்தலைவர் சேகரன். மேற்கு ஒன்றிய ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் செந்துாரான், வடக்கு ஒன்றிய பேரவை ஒன்றிய செயலாளர் வடிவேலன், மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் கோவிந்தன், வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட விவசாய அணி துணைச் செய லாளர் கோவிந்தன், வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலாளர் லோகநாதன், மேற்கு ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி ராமகிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி