மேலும் செய்திகள்
அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
08-Aug-2025
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அரசு உதவி பெறும் சரஸ்வதி பள்ளி மாணவர்களுக்கு இலவச பேக், சீருடைகள் வழங்கப்பட்டது. ராமேஸ்வரம் ஜெ.ஜெ., நகரில் உள்ள அரசு உதவி பெறும் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் 90 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று பள்ளியில் நடந்த விழாவில் தாளாளர் சீதாராம்தாஸ் பாபா தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியை சிவா வரவேற்றார். விழாவில் ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார், மண்டபம் வட்டார கல்வி அலுவலர் ராமநாதன், நல்லாசிரியர் ஜெயகாந்தன் வாழ்த்தி பேசினார்கள். பின் மாணவர்களுக்கு இலவச பேக், 2 செட் பள்ளி சீருடைகள், எழுது பொருள்கள் வழங்கப்பட்டது. விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் முகேஷ், பிரபு, பள்ளிக் கல்விக் குழு உறுப்பினர்கள் சுடலை, முருகன், ராமு, முனியசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர் ராமசாமி நன்றி கூறினார்.
08-Aug-2025