குழந்தைகளுக்கான இலவச இதய பரிசோதனை முகாம்
கீழக்கரை: கீழக்கரை ரோட்டரி சங்கம், ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான இலவச இதய பரிசோதனை முகாம் நடந்தது. கீழக்கரை பி.எஸ்.எஸ்.ஜே. நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த முகாமிற்கு மாவட்ட ரோட்டரி சங்க கவர்னர் தினேஷ் பாபு துவக்கி வைத்தார். இதில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றன. இதில் 5 குழந்தைகள் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு இலவச அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல உள்ளனர். மாவட்ட துணை கவர்னர் சுந்தரம், இதய முகாம் சேர்மன் லியாக்கத்தலி, நிர்வாகிகள் பார்த்தசாரதி, சரவணன், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சிவகார்த்திகேயன், செயலாளர் சதீஷ், ஈஸ்ட் கோஸ்டு ராம்நாடு ரோட்டரி சங்க தலைவர் ஜெகன், அகிலன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் கேசவன், சுப்பிரமணியன், எபன், சித்திரவேலு, சர்புதீன், தர்மராஜா, சதக் இளவரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.