உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

ராமநாதபுரம்: தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் 2 மாதம் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இதில் 18 முதல் 35 வயது வரை உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த வேலை தேடும் இருபாலரும் பங்கேற்லாம். ஏ.சி., சர்வீஸ், காஸ் சார்ஜிங், பிரிட்ஜ் பழுது நீக்குதல், லேப் டெக்னீசியன், ஜெனரல் டூட்டி நர்ஸ் உதவியாளர் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் பயிற்சி அளிக்கப்படும். முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் டிச.,30க்குள் ராமநாதபுரம் ஜாஸ் தொழில் பள்ளியை 81241 00380, 78716 21061 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !