உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலவச வெறி நோய் தடுப்பு ஊசி முகாம்

இலவச வெறி நோய் தடுப்பு ஊசி முகாம்

பரமக்குடி: பரமக்குடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நாய்களுக்கான இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. செப்.,28 உலக வெறி நோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பரமக்குடி நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து முகாம் நடத்தினர். ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குனர் டாக்டர் அரசு தலைமை வகித்து துவக்கினார். பரமக்குடி உதவி இயக்குனர் டாக்டர் சுந்தரமூர்த்தி ஏற்பாடுகளை செய்தார். அப்போது சிறப்பு கால்நடை மேற்பார்வையாளர் முருகேசன் பங்கேற்று, 24 வளர்ப்பு செல்லப் பிராணிகள் மற்றும் சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினார். கால்நடை பராமரிப்பு உதவியாளர் தாரணி நன்றி கூறினார். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை