உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிரசவத்திற்கு இலவச வாகனம்

பிரசவத்திற்கு இலவச வாகனம்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் சவுராஷ்டிர சமூக நலச் சங்கம் சார்பில் குடியரசு தினம், பிரசவத்திற்கு இலவச வாகனம் வழங்கல் மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. சங்கத் தலைவர் கங்காதரன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார். அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் பிரசவத்திற்கு இலவச வாகன வசதியை டாக்டர் ஜவஹர்லால் துவக்கி வைத்தார்.சராஷ்டிரா சபை, சமூக நலச் சங்கம், ஹேமந்த் பரசுராமன் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமை எமனேஸ்வரம் சபை தலைவர் கோவிந்தன் துவக்கி வைத்தார். சங்க பொதுச் செயலாளர் சரவணன் வரவேற்றார். பொருளாளர் சசிகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ