மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்; 600 பேர் பங்கேற்பு
10-Aug-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். இதில் கலந்து கொண்டவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. உயர்சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவமனை செல்ல பரிந்துரைக்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, புதிதாக முதல்வர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமில் இணை இயக்குநர் (மருத்துவ நலப் பணிகள்) பிரகலாதன், மாவட்ட சுகாதர அலுவலர் பார்த்திபன், வட்டார மருத்துவ அலுவலர் ஜன்னத் யாஸ்மின், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
10-Aug-2025