உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கரையோரம் போடப்பட்ட விநாயகர் சிலைகள்

கரையோரம் போடப்பட்ட விநாயகர் சிலைகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகளை ஊருணிக்குள் போடாமல் கரையில் போட்டுவிட்டு சென்றதால் கரையாமல் கிடக்கின்றன. ராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் நம்ம சுவாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்...' எனும் தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டனர். அனைத்து விநாயகர் சிலைகளும் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் முன்பு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டது. இறுதியாக நொச்சியூருணிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கென தனியாக தண்ணீர் சேமிக்கப்பட்டு ஒவ்வொரு சிலையாக கரைக்கப்பட்டன. இந்நிலையில் கொண்டு வந்த விநாயகர் சிலைகளில் 10க்கும் மேற்பட்ட சிலைகள் கரையாமல் கிடந்தன. சில சிலைகளை தண்ணீருக்குள் போடாமல் கரையின் ஓரம் போட்டு சென்றதால் முழு விநாயகர் சிலையாகவே இருந்தன. இதனை பார்த்த மக்கள் வேதனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !