உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் ஆக.25ல் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

ராமேஸ்வரத்தில் ஆக.25ல் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

ராமேஸ்வரம் ஹிந்து முன்னணி சார்பில், வரும் ஆக.,25ல் ராமேஸ்வரத்தில் 26 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ஆக., 27ல் விநாயகர் சதுர்த்தி யொட்டி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ராமேஸ்வரத்தில் ஹீந்து முன்னணியினர் 5 அடி முதல் 12 அடி உயரத்தில் 26 விநாயகர் சிலைகளை லாரியில் கொண்டு வந்தனர். இந்த சிலைகள் காகித கூழ், கிழங்கு மாவு உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களில் தயாரித்ததால் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலை ஆகும். இச்சிலைகளை ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். ஆக., 25ல் விநாயகர் சிலைகளை திட்டக்குடி, காந்தி நகர், வேர்க்கோடு, இந்திரா நகர், கரையூர் உள்ளிட்ட 26 இடங்களில் பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !