உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடற்கரையில் கொட்டப்படும் குப்பை

கடற்கரையில் கொட்டப்படும் குப்பை

ஆர்.எஸ்.மங்கலம் : தேவிபட்டினம் கடற்கரை பகுதிகளில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.தேவிபட்டினம் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் குப்பையை அப்பகுதி கடற்கரையோரத்தில் கொட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் குப்பையை அகற்றாததால் கடற்கரை ஓரங்களில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளிவரும் செப்டிக் டேங்க் கழிவுநீரை பைப்புகள் பதிக்கப்பட்டு நேரடியாக கடலில் விடுகின்றனர்.இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால் குடியிருப்பு பகுதி செப்டிக் டேங்க் கழிவு நீர் உள்ளிட்ட கழிவு மாசுகளால் கடல்வாழ் உயிரினங்களும், பவளப் பாறைகளும் பாதிக்கப்பட்டு மீன் வளம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் கடற்கரையோரம் தேங்கியுள்ள குப்பையை அகற்றுவதுடன், குடியிருப்பு பகுதிகளில் இருந்து நேரடியாக கடலில் கலக்கும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ