பொதுக்குழு கூட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை ஓய்வுப் பெற்ற அலுவலர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் குயவன்குடி சங்க கட்டடத்தில் நடந்தது. செயலாளர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். பொருளாளர் ராமசாமி நிதி அறிக்கை வாசித்தார். மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். சங்க உறுப்பினர்களுக்கு வாசன் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை நடந்தது. எஸ்.பி.ஐ., வங்கி சார்பில் வங்கிப் பணப்பலன், பயன்கள் குறித்து பேசினர். மாநில நிர்வாகிகள் கண்ணன், நாகரத்தினம், மாவட்ட நிர்வாகிகள் கார்த்திகேயன், ராமநாதன், எஸ்.கே.ராமசாமி, போஸ் பங்கேற்றனர். சக்திவேல் நன்றி கூறினார்.