மாநில ஹாக்கி போட்டிக்கு தேர்வான உத்தரகோசம ங்கை பள்ளி மாணவிகள்
உத்தரகோசமங்கை பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட அளவிலான 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான ஹாக்கி போட்டியில் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணியினர் வெற்றி பெற்றனர். இதையடுத்து நாளை(ஜன.6) மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மதுரை அருகே வாடிப்பட்டியில் நடக்க உள்ளது.இதில் வெற்றி பெற்ற இந்த மாணவிகள் பங்கேற்க உள்ளனர். மாணவிகளை தலைமை ஆசிரியர் ராணி, உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், மகாலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.