உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முன்னாள் அமைச்ச ர் அணிந்த தங்க செயின் ரயிலில் மீட்பு

முன்னாள் அமைச்ச ர் அணிந்த தங்க செயின் ரயிலில் மீட்பு

ராமேஸ்வரம்:ஜெயலலிதா, 1991--96ல் முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்தவர், சத்தியமூர்த்தி. தற்போது தி.மு.க.,வில் உள்ளார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மண்டபம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ''ஏசி' பெட்டியில் பயணித்து உள்ளார். இவரது 6 சவரன் தங்கச் செயினை கழற்றி தலையணைக்கு கீழ் வைத்து துாங்கி விட்டார். பின், சொந்த ஊரான சாயல்குடி அருகே மேலச்செல்வனுார் செல்ல பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய போது செயினை எடுக்காமல் இறங்கி விட்டார்.ஊருக்கு சென்றதும் செயினை எடுக்காமல் சென்றது குறித்து போலீசாருக்கு தெரிவித்தார்.இதையடுத்து, ராமேஸ்வரம் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., முத்துமுனியசாமி, தனிப்பிரிவு காவலர் மல்கோத்ரா பாண்டியன் ஆகியோர் மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் சென்று ரயில் பெட்டியில் கிடந்த தங்க செயினை முன்னாள் அமைச்சரின் உறவினரிடம் ஒப்படைத்தனர். செயின் காணாமல் போனதும் போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டதை பயணியர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ