புதிய வழித்தடத்தில் அரசு பஸ்
ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரத்தில் இருந்து சிவகங்கை, ஆர்.எஸ். மங்கலம், தேவிபட்டினம் வழியாக மதுரை சென்று வரும் வகையில் புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் உள்ள தேவிபட்டினம், பொட்டகவயல், கொடிக்குளம், ஆட்டாங்குடி, மேலேந்தல், செங்குடி, வாணியக்குடி, சாத்தனுார், சாலைகிராமம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நுாறுக்கு மேற்பட்ட கிராமத்தினர் பயனடைவர்.ராமநாதபுரத்தில் இருந்து தினமும் காலை 10:45க்கு புறப்படும் இந்த பஸ் இந்த வழித்தடம் வழியாக மதுரைக்கு இயக்கப்படுகிறது.