மேலும் செய்திகள்
பரமக்குடி அருகே மின்னல் தாக்கி அக்கா, தங்கை பலி
23-Aug-2025
இழப்பீடு வழங்க கோரிக்கை
27-Aug-2025
பரமக்குடி:பரமக்குடி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோருக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. பரமக்குடி அருகே வாழவந்தாள்புரம் நுாருல் அமீன் மகள்கள் செய்யது அஸ்பியா பானு 13, சபிக்கா பானு 9. இருவரும் அரசு பள்ளியில் படித்த நிலையில் ஆக.,23 ல் வீட்டருகே வேப்ப மரத்தடியில் வேப்பங்கொட்டைகளை சேகரிக்க சென்றனர். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் பலியாகினர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு நிதியில் ரூ.8 லட்சத்திற்கான காசோலையை பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவணபெருமாள், எம்.எல்.ஏ.,க்கள் முருகேசன், முத்துராமலிங்கம், தாசில்தார் வரதன் உள்ளிட்டோர் வழங்கினர்.
23-Aug-2025
27-Aug-2025