பொட்டகவயலில் நீரில் மிதக்கும் அரசு பள்ளி: மாணவர்கள் அவதி
ராமநாதபுரம்: நயினார்கோவில் ஒன்றியம் பொட்டகவயல் அரசுமேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம் போல தேங்கியுள்ள மழைநீரால்தினமும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தேவிபட்டினம் அருகே பொட்டகவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அந்த ஊரைசுற்றியுள்ள 6 கிராமங்களை சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவர்கள்படிக்கின்றனர். போதுமான குடிநீர், கழிப்பறை வசதியின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மழைநீர் செல்லவழியின்றி ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி பாம்பு, தேள், போன்ற விஷ ஜந்துகள் நடமாட்டத்தால் மாணவர்களின்பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து பொட்டகவயலை சேர்ந்த காதர்பாட்ஷா, சாகிரபானுஆகியோர் கூறுகையில், பள்ளியின் அவலநிலை குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குளம் போல தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து செல்ல மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே மழைநீரை அகற்றி மீண்டும் தேங்காதவகையில் வடிகால் வசதியும், பள்ளிக்கு கூடுதலாக கழிப்பறை, குடிநீர்வசதி செய்து தர வேண்டும். அதற்கு அதிகாரிகள் உத்தரவிடவேண்டும் என்றனர்.