மேலும் செய்திகள்
பாராட்டு சான்றிதழ்
05-Nov-2025
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி விஜயமாலினி 13, மத்தியபிரதேசத்தில் நடக்கும் தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரகோசமங்கை திருவள்ளுவர் நகரை சேர்ந்த இவர், மத்திய பிரதேசம் மாநில் குணாவில் நடக்கவுள்ள தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கு அடுத்த மாதம்(டி.ச.,) செல்ல உள்ளார். இவரை பள்ளி தலைமையாசிரியர் வேணி ரத்தினம், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், மகாலிங்கம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர். இதே பள்ளியில் படிக்கும் இவரது மூத்த சகோதரி சக்தி விஜயசாந்தி கடந்த ஆண்டு ஹரியானாவில் நடந்த தேசிய ஹாக்கி போட்டியில் விளையாடினார். சாதனை மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் பாராட்டினர்.
05-Nov-2025