உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறிய ஜவுளிப்பூங்காவிற்கு அரசு மானியம் செப்.25ல் தொழில் முனைவோர் கூட்டம்

சிறிய ஜவுளிப்பூங்காவிற்கு அரசு மானியம் செப்.25ல் தொழில் முனைவோர் கூட்டம்

ராமநாதபுரம்,- சிறிய ஜவுளிப்பூங்கா அமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக செப்.25ல் மதியம் 1:30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.ஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களுக்குள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கரில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டு மற்றும் தொழிற்சாலைக்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டுமாவட்டத்தில் வேலை வாய்ப்பு பெருகும். அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் செப்.25ல் மதியம் 1:30மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடக்கிறது.அனைத்து தொழில் முனைவோர்கள், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !