உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாலிபால் போட்டியில் கீழக்கரை கல்லுாரி முதலிடம்

வாலிபால் போட்டியில் கீழக்கரை கல்லுாரி முதலிடம்

கீழக்கரை: அழகப்பா பல்கலை இணைப்பு கல்லுாரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி காரைக்குடி அருகே உள்ள வித்யாகிரி கல்லுாரியில் நடந்தது.அழகப்பா பல்கலை இணைப்பு பெற்ற 16 கல்லுாரிகள் போட்டியில் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி அணி வெற்றி பெற்று முதல் பரிசு மற்றும் கோப்பையை வென்றது.வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களையும், உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் ஆகியோரை முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப், செயலர் ஷர்மிளா, நிர்வாக இயக்குனர் ஹமீத் இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முகமது, செயல் திட்ட அலுவலர் விஜயகுமார், முதல்வர் ராஜசேகர் பாராட்டி பரிசு வழங்கினர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை