உள்ளூர் செய்திகள்

 பட்டமளிப்பு விழா

கீழக்கரை: -கீழக்கரை முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் 39வது பட்டமளிப்பு விழா நடந்தது. முகமது சதக் அறக்கட்டளை இயக்குநர் ஹபீப் முகமது தலைமை வகித்தார். முதல்வர் நிர்மல் கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலை பதிவாளர் குமரேசன் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இளநிலை பிரிவில் 218 பேர், முதுநிலை பிரிவிலும் 101 பேர் பட்டம் பெற்றனர். கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார், டீன் அகாடமி அலுவலர் திராவிட செல்வி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜேஸ்வரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !