உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மே 1ல் கிராமசபை கூட்டம்

மே 1ல் கிராமசபை கூட்டம்

திருவாடானை : தொழிலாளர் தினமான மே 1 ல் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மே 1ல் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து திருவாடானை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் கூறியதாவது: மே 1ல் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். ஊராட்சிகளின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும். பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ