அக்.11ல் கிராம சபை கூட்டம்
ராமநாதபுரம் : காந்தி ஜெயந்தியன்று நடக்க இருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அக்.,11 காலை 11:00 மணிக்கு நடைபெற வுள்ளது. இக்கூட்டத்தில் கிராம மக்களின் 3 அத்தியாவசயமான தேவைகளை தேர்வு செய்து ஒப்புதல் பெறலாம். ஜாதிப் பெயரில் உள்ள ரோட்டின் பெயரை மாற்றுவது, நிர்வாக நிதி செலவினம் குறித்தும், கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை பணிகள் குறித்தும் விவாதிக்கலாம். கிராம மக்கள் அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தாமாக முன்வந்து கருத்துக்களை தெரிவிக்குமாறு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.