நவ. 7ல்குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம்: மாவட்ட மீனவர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நவ., 7 ல் மதியம் 3:30 மணிக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் குறைகேட்பு கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே அனைத்து மீனவமக்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் அளித்து பயன் பெறலாம்.