உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

பரமக்குடி: பரமக்குடி அருகே புதுக்குடி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பரமக்குடி ஒன்றியம் புதுக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் நுாறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு மார்ச் 21 மாலை பள்ளி ஆண்டு விழா நடப்பதாக இருந்தது.அன்று அப்பள்ளியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவிகள் யாழினி, பானு, சுகன்யா ஸ்ரீ உள்ளிட்டோர் அருகிலுள்ள கண்மாயில் குளித்தனர்.அப்போது மூவரும் குளத்தில் மூழ்கிய நிலையில் இருவர் காப்பாற்றப்பட்டனர். யாழினி 12, பலியானார். தலைமை ஆசிரியை சுமதி கவனக் குறைவாக செயல்பட்டதாக பரமக்குடி மாவட்ட கல்வி அதிகாரி சேதுராமன் அவரை சஸ்பெணட் செய்தார்.இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர். அப்போது தலைமை ஆசிரியை சுமதி சஸ்பெணட் செய்யப்பட்டதை அறிந்து பெற்றோருடன் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி சேதுராமன் மீண்டும் 10 நாட்களில் தலைமை ஆசிரியை இதே பள்ளிக்கு நியமிக்கப்படுவார் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி