ராமநாதபுரம் மருத்துவமனையில் கழிவு நீரால் சுகாதாரக்கேடு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கழிவு நீர் வெளியேறி நடைபாதையில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாக 500 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். சித்த மருத்துவப்பிரிவு அலுவலகத்திற்கு செல்லும் வழியில் நிலைய மருத்துவ அலுவலர் குடியிருப்பு, பயிற்சி டாக்டர்கள் குடியிருப்பு, செவிலியர் பள்ளி மாணவிகள் விடுதி பகுதியில் கழிவு நீர் வெளியேறி மக்கள் நடந்து செல்லும் பாதையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவு நீரால் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு நோய் பரவும் நிலையும், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.