மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
14-May-2025
பரமக்குடி:பரமக்குடி திரவுபதி அம்மன் கோயில் அருகில்வாறுகால் கழிவுகள் ரோட்டில் தேங்குவதால் பக்தர்கள் மற்றும் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் திரவுபதிஅம்மன் கோயில் உள்ளது.இங்குள்ள இளையான்குடி ரோட்டில் பஸ் ஸ்டாப் செயல்படுகிறது. கோயிலை ஒட்டிய பகுதியில் குறுகிய வாறுகால் செல்கிறது. இதன் வழியாக ஏராளமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் கடந்தும் செல்லும் நிலையில் வாறுகால் முறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதனால் சிறிதளவு மழை பெய்தாலும் அப்பகுதி முழுவதும் கழிவுநீருடன் மழை நீர் குளம் போல் தேங்குகிறது. மேலும் நாள் முழுவதும் கழிவுநீர் செல்ல வழியின்றி ரோடுகளில் தேங்குவதால் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் மற்றும் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். மேலும் சுகாதாரக் கேடான சூழலில் மக்கள் நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே உடனடியாக வாறுகாலில் கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்துவதுடன், முறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
14-May-2025