உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி அரசு ஆண்கள் பள்ளி முன்பு திறந்தவெளி கழிவு நீர் வாறுகால் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத் துறையினர்

சாயல்குடி அரசு ஆண்கள் பள்ளி முன்பு திறந்தவெளி கழிவு நீர் வாறுகால் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத் துறையினர்

சாயல்குடி : சாயல்குடி - துாத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை அரசு ஆண்கள் பள்ளி வழியாக செல்கிறது. இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த நிலையில் உள்ள கழிவுநீர் வாறுகால்வாய் திறந்த வெளியாக உள்ளதால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்பாக 100 மீ., நீளத்திற்கு வாறுகால் திறந்த வெளியில் உள்ளது. 2010ம் ஆண்டில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் போது மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட வாறுகால் வாயாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிச., மாதத்தில் நகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இரு பக்கங்களில் உள்ள பக்கவாட்டு தடுப்புச் சுவர் முழுவதுமாக சேதமடைந்து மண்மேவி காணப்படுகிறது. எனவே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பக்கவாட்டுச் சுவர் அமைத்தும் அவற்றின் மீது சிமென்ட் ஸ்லாப் மூடிகள் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை